முத்தமிழ்ப்பள்ளி பற்றி

முத்தமிழ்ப்பள்ளி, குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. வடக்கு ஜெர்சி முத்தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாக முத்தமிழ்ப் பள்ளி உருவாகியது.

உலகாளும் தமிழை உள்ளார்ந்த அன்போடு நம் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பது நம் முத்தமிழ்ப் பள்ளியின் தலையாய கடமையாகும்.

முதல் வருடத்திலேயே சுமார் 50 மாணவர்களுடன் அமோக வரவேற்புடன் நம் பள்ளி முத்திரை பதித்துள்ளது. திறன்மிகு 12 ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களுக்கு நம் மொழியை கற்பிக்கிறார்கள்.

எங்கள் செயல்பாடுகள்

முத்தமிழ் பள்ளியின் “எங்கள் செயல்பாடுகள்” பகுதி தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்களுக்கு விருப்பமான முறையில் கற்றுத்தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்கள், கலைகள், நடனம், இசை, கதைபொழிவுகள் ஆகியவற்றின் மூலம், தமிழ் மரபு மற்றும் அறத்தை ஊக்குவித்து, அவர்களின் மொழிப் பழக்கத்தையும் சமூக அறிவையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுகின்றோம்.

வடக்கு ஜெர்சி முத்தமிழ் சங்கம்

தமிழால் நாம் ! தமிழராய் நாம் !! தமிழுக்காக நாம் !!!

இம்மண்ணில் வாழும் உயிருக்கெல்லாம் பொதுமறையாம் திருக்குறள்தனை உலகினுக்கு தந்த வான் புகழ் மொழி, ஊர் எல்லாம் நம் ஊரே; உலக மக்கள் யாவரும் நம் சுற்றத்தாரே என உலகினை ஒர் குடையின் கீழ் அளந்த
உயர் செம்மொழியாம் தமிழ் மொழியின் வளமையையும், உரக்கச் சொல்லவும், தமிழர்களின் பண்பாடு, கலை, மற்றும் இலக்கியச் செறிவை நம் இளைய தலைமுறையின் கைகளில் உயிர்ப்புடன் சேர்த்திடவும்; மதம், இனம், தேசம் கடந்து சகமனிதனின் துயர் துடைக்கும் கரமாகவும் (கரங்களாகவும்), அன்பை விதைக்கும் ஆலயமாகவும், நம் நலன் பேணிட வழிகாட்டியாகவும், அமெரிக்க குடியரசின் அனைத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூஜெர்சி முத்தமிழ்ச் சங்கம் செயல்படும்.