


முத்தமிழ்ப்பள்ளி, குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு. வடக்கு ஜெர்சி முத்தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாக முத்தமிழ்ப் பள்ளி உருவாகியது.
உலகாளும் தமிழை உள்ளார்ந்த அன்போடு நம் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பது நம் முத்தமிழ்ப் பள்ளியின் தலையாய கடமையாகும்.
முதல் வருடத்திலேயே சுமார் 50 மாணவர்களுடன் அமோக வரவேற்புடன் நம் பள்ளி முத்திரை பதித்துள்ளது. திறன்மிகு 12 ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களுக்கு நம் மொழியை கற்பிக்கிறார்கள்.
முத்தமிழ் பள்ளியின் நோக்கம் தமிழகத்தின் தொன்மையான தமிழ் மொழியை நியூ ஜெர்சியின் பார்சிப்பனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுப்பதாகும். இதன் மூலம் மாணவர்கள் தமிழ் மொழியின் எழுத்து, பேச்சு மற்றும் கலை வடிவங்களை அடிப்படையில் புரிந்து கொள்ளவும், மொழியின்மேல் அவ்வழகும் ஆழமுமுள்ள புரிதலை பெறவும் உதவுவதே இந்த பாடசாலையின் முக்கிய நோக்கமாகும்.
நம் முத்தமிழ்ப் பள்ளி அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தின்(ATA) பாடத்திட்டங்களைப் பின் பற்றுகிறது.
தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வரும் முத்தமிழ்ப்பள்ளி 2024 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று அவற்றின் நிரூபிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும், கற்பித்தல் முறையையும் பின்பற்றிவருகிறது.
அறம் மறவற்க என்பது முத்தமிழ்ப் பள்ளியின் கொள்கை மொழி. தமிழர்களின் சிறப்பு அறத்தோடு ஒன்றிய வாழ்வு. நம் முத்தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அறம் சார்ந்த கதைகளை முதலில் அறிமுகப் படுத்தி , பின்னர் ஆறம் சார்ந்த செயல்களை செய்ய ஊக்குவிப்பதுடன்
நம் NJMTS சங்கத்தின் வாயிலாக பல புதிய முன்னெடுப்புகளைச் செய்ய உள்ளனர்.
முத்தமிழ்ப் பள்ளி அனைத்துவித இனம், நிறம், தேசிய இனம் சார்ந்த மாணவர்களை அனுமதிக்கின்றது. பள்ளியில் மாணவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அல்லது கிடைக்கப்பெறும் அனைத்து உரிமைகள், சலுகைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கின்றது. சேர்க்கைக் கொள்கைகள், உதவித்தொகை மற்றும் கடன் திட்டங்கள் மற்றும் தடகள மற்றும் பிற பள்ளி நிர்வாகத் திட்டங்கள் ஆகியவற்றில் நிர்வாகத்தில் இனம், நிறம், தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இது பாகுபாடு காட்டாது.
முத்தமிழ் பள்ளியின் “எங்கள் செயல்பாடுகள்” பகுதி தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்களுக்கு விருப்பமான முறையில் கற்றுத்தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்கள், கலைகள், நடனம், இசை, கதைபொழிவுகள் ஆகியவற்றின் மூலம், தமிழ் மரபு மற்றும் அறத்தை ஊக்குவித்து, அவர்களின் மொழிப் பழக்கத்தையும் சமூக அறிவையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுகின்றோம்.
தமிழால் நாம் ! தமிழராய் நாம் !! தமிழுக்காக நாம் !!!
இம்மண்ணில் வாழும் உயிருக்கெல்லாம் பொதுமறையாம் திருக்குறள்தனை உலகினுக்கு தந்த வான் புகழ் மொழி, ஊர் எல்லாம் நம் ஊரே; உலக மக்கள் யாவரும் நம் சுற்றத்தாரே என உலகினை ஒர் குடையின் கீழ் அளந்த
உயர் செம்மொழியாம் தமிழ் மொழியின் வளமையையும், உரக்கச் சொல்லவும், தமிழர்களின் பண்பாடு, கலை, மற்றும் இலக்கியச் செறிவை நம் இளைய தலைமுறையின் கைகளில் உயிர்ப்புடன் சேர்த்திடவும்; மதம், இனம், தேசம் கடந்து சகமனிதனின் துயர் துடைக்கும் கரமாகவும் (கரங்களாகவும்), அன்பை விதைக்கும் ஆலயமாகவும், நம் நலன் பேணிட வழிகாட்டியாகவும், அமெரிக்க குடியரசின் அனைத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூஜெர்சி முத்தமிழ்ச் சங்கம் செயல்படும்.