முத்தமிழ்ப்பள்ளி, குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பிக்க, நியூஜெர்சியில் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு.வடக்கு ஜெர்சி முத்தமிழ் சங்கத்தின் ஒரு அங்கமாக முத்தமிழ்ப் பள்ளி உருவாகியது.
உலகாளும் தமிழை உள்ளார்ந்த அன்போடு நம் அடுத்த தலைமுறைக்கு கற்பிப்பது நம் முத்தமிழ்ப் பள்ளியின் தலையாய கடமையாகும்.
முதல் வருடத்திலேயே சுமார் 50 மாணவர்களுடன் அமோக வரவேற்புடன் நம் பள்ளி முத்திரை பதித்துள்ளது. திறன்மிகு 12 ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் மாணவர்களுக்கு நம் மொழியை கற்பிக்கிறார்கள்.
முத்தமிழ் பள்ளியின் நோக்கம் தமிழகத்தின் தொன்மையான தமிழ் மொழியை நியூ ஜெர்சியின் பார்சிப்பனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுப்பதாகும். இதன் மூலம் மாணவர்கள் தமிழ் மொழியின் எழுத்து, பேச்சு மற்றும் கலை வடிவங்களை அடிப்படையில் புரிந்து கொள்ளவும், மொழியின்மேல் அவ்வழகும் ஆழமுமுள்ள புரிதலை பெறவும் உதவுவதே இந்த பாடசாலையின் முக்கிய நோக்கமாகும்.
நம் முத்தமிழ்ப் பள்ளி அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தின்(ATA) பாடத்திட்டங்களைப் பின் பற்றுகிறது.
தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வரும் முத்தமிழ்ப்பள்ளி 2024 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று அவற்றின் நிரூபிக்கப்பட்ட பாடத்திட்டங்களையும், கற்பித்தல் முறையையும் பின்பற்றிவருகிறது.
அறம் மறவற்க என்பது முத்தமிழ்ப் பள்ளியின் கொள்கை மொழி. தமிழர்களின் சிறப்பு அறத்தோடு ஒன்றிய வாழ்வு. நம் முத்தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு அறம் சார்ந்த கதைகளை முதலில் அறிமுகப் படுத்தி , பின்னர் ஆறம் சார்ந்த செயல்களை செய்ய ஊக்குவிப்பதுடன்
நம் NJMTS சங்கத்தின் வாயிலாக பல புதிய முன்னெடுப்புகளைச் செய்ய உள்ளனர்.
முத்தமிழ்ப் பள்ளி அனைத்துவித இனம், நிறம், தேசிய இனம் சார்ந்த மாணவர்களை அனுமதிக்கின்றது. பள்ளியில் மாணவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் அல்லது கிடைக்கப்பெறும் அனைத்து உரிமைகள், சலுகைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கின்றது. சேர்க்கைக் கொள்கைகள், உதவித்தொகை மற்றும் கடன் திட்டங்கள் மற்றும் தடகள மற்றும் பிற பள்ளி நிர்வாகத் திட்டங்கள் ஆகியவற்றில் நிர்வாகத்தில் இனம், நிறம், தேசிய இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இது பாகுபாடு காட்டாது.
முத்தமிழ் பள்ளியின் கலைகாட்சி, மாணவர்களின் திறமைகள் மற்றும் படைப்புகளை வெளிப்படுத்தும் இடமாகும். இதில் மாணவர்கள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்த பல்வேறு கலை வடிவங்களை ஊக்குவிக்கப்படுகின்றனர்.
முத்தமிழ் பள்ளியின் “எங்கள் செயல்பாடுகள்” பகுதி தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மாணவர்களுக்கு விருப்பமான முறையில் கற்றுத்தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்கள், கலைகள், நடனம், இசை, கதைபொழிவுகள் ஆகியவற்றின் மூலம், தமிழ் மரபு மற்றும் அறத்தை ஊக்குவித்து, அவர்களின் மொழிப் பழக்கத்தையும் சமூக அறிவையும் மேம்படுத்தும் வகையில் செயல்படுகின்றோம்.
பள்ளி நிர்வாக குழு என்பது பள்ளியின் செயல்பாடுகளை வெற்றிகரமாக முன்னேற்றுவதற்கான முக்கிய பொறுப்புகளை வகிக்கிறது. மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துதல், பள்ளி வளங்களை சரியாக திட்டமிடுதல், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கிடையேயான நல்ல ஒத்துழைப்பை உறுதி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை இக்குழு முன்னெடுக்கிறது. மேலும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் விதமாக செயல் திட்டங்களை உருவாக்குகிறது. இதன் மூலம், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சமூகத்தின் மேம்பாட்டிற்கும் இக்குழு சாதனைகள் நிகழ்த்துகிறது.
தமிழ் மதம் எனில், தமிழுக்கும் ஆற்றும் சேவையே தவம் என்ற நெறியின் கீழ் வாழும் தமிழ்ப் பற்றாளர். இவருக்கும் தமிழுக்குமான உறவு, உயிருக்கும், மெய்க்கும் இணையானது. தமிழை தன் எழுத்தின் பல பரிமாணங்களில் ஆராதிப்பவர், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என தொடர்ந்து இயங்கும் இவருக்கு “கவி இளவரசர்” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறது அறம் வழி அறக்கட்டளை. எழுத்துக்கலை மட்டுமல்லாது பேச்சுக்கலையிலும் தன் தமிழ் ஆளுமையை செலுத்தம் இவர், பட்டிமன்ற பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என பன்முகங்களில் தமிழ்ப் பணியே தலையாயது என வாழுபவர் நம் தமிழ்ப் பள்ளியின் முதல்வர் திருமதி பாக்கியலட்சுமி. இவரது படைப்புகள் சில: சிந்திக்க சில (க) விதைகள் சிறகடித்த சிறுகதைகள் Short Autobiography of Bharathi(listed in Montville Middle School Library)
முத்தமிழ் பள்ளியின் துணை முதல்வர்.இவர் அனுபவம் நிறைந்த தமிழாசிரியர்.பட்டிமன்றங்களில் ஆர்வத்தோடு பங்கு பெறுபவர். தன் வேலைப்பளுவிற்கு இடையிலும் தமிழ்ப் பள்ளியில் பல பொறுப்புகளை ஏற்று திறம் பட பணிபுரிபவர். தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட இவர் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவர்.
முத்தமிழ் பள்ளியின் எங்கள் குழு ஆசிரியர்கள், மாணவர்களின் வளர்ச்சிக்காக நேர்மையும் தன்னிறைவுடனும் பாடுபடுகின்றனர்.
வாழ்க்கைமுறை கல்வியையும் சமூகப் பொறுப்பையும் வளர்க்கும் பணி எங்கள் நோக்கம்.
மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் கற்றல் முறைகள் எங்களின் முதன்மையான கவனம்.
முத்தமிழின் செழுமையை வளர்க்கும் விதமாக மொழி, கலாச்சாரம், அறிவியல் இணைந்த பாடங்களை அளிக்கிறோம்.
மாணவர்களின் வெற்றியே எங்கள் பள்ளியின் பெருமை!
தமிழால் நாம் ! தமிழராய் நாம் !! தமிழுக்காக நாம் !!!
இம்மண்ணில் வாழும் உயிருக்கெல்லாம் பொதுமறையாம் திருக்குறள்தனை உலகினுக்கு தந்த வான் புகழ் மொழி, ஊர் எல்லாம் நம் ஊரே; உலக மக்கள் யாவரும் நம் சுற்றத்தாரே என உலகினை ஒர் குடையின் கீழ் அளந்த
உயர் செம்மொழியாம் தமிழ் மொழியின் வளமையையும், உரக்கச் சொல்லவும், தமிழர்களின் பண்பாடு, கலை, மற்றும் இலக்கியச் செறிவை நம் இளைய தலைமுறையின் கைகளில் உயிர்ப்புடன் சேர்த்திடவும்; மதம், இனம், தேசம் கடந்து சகமனிதனின் துயர் துடைக்கும் கரமாகவும் (கரங்களாகவும்), அன்பை விதைக்கும் ஆலயமாகவும், நம் நலன் பேணிட வழிகாட்டியாகவும், அமெரிக்க குடியரசின் அனைத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாக நியூஜெர்சி முத்தமிழ்ச் சங்கம் செயல்படும்.
2024 Designed by @venu softwares